கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கருணாநிதி பிறந்த நாள் விழா: நாமக்கல்லில் 1,200 பேருக்கு நல உதவிகள்

நாமக்கல்லில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி 1,200 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

News image

நாமக்கல்லில் அச்சக தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்கள்,  காய்கறி தொகுப்புகளை வழங்கும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ.காந்தி செல்வன்.

Updated On :3 ஜூன் 2020, 6:58 am

DIN


நாமக்கல்: நாமக்கல்லில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி 1,200 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் புதன்கிழமை தமிழகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்றது. நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே. ஆர். என்.ராஜேஷ் குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதேபோல் முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ.காந்தி செல்வன் தன்னுடைய கட்சி அலுவலகத்தில் மூத்த கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு அவர் கட்சி கரை வேட்டிகளை வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து கட்சியினர், மூத்த நிர்வாகிகள், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள், அச்சக தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 1200 பேருக்கு மளிகை பொருட்கள்,  காய்கறி தொகுப்புகள், முட்டைகள் அடங்கிய பைகளை காந்திசெல்வன் அனைவருக்கும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட,  நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.