புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விழுப்புரம் அருகே லாரி ஓட்டுநர் அடித்துக்கொலை

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் தமிழ்ச்செல்வன்(30). லாரி ஓட்டுநரான இவர் விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி

News image
Updated On :6 ஜூன் 2020, 6:18 am


விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் தமிழ்ச்செல்வன்(30). லாரி ஓட்டுநரான இவர் விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மேல்பாதி பகுதி சமத்துவபுரம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

சனிக்கிழமை காலை தகவலறிந்த வளவனூர் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் அப்பகுதியில் மது அருந்திய போது ஏற்பட்ட முன்விரோத தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.