புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விழுப்புரம் சின்ன கோட்டகுப்பத்தில் புதுச்சேரியைச் சேர்ந்தவர் வெட்டிக் கொலை

விழுப்புரம் மாவட்டம் சின்ன கோட்டகுப்பத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரை மர்ம கும்பல் ஞாயிற்றுக்கிழமை வெட்டி கொலை செய்துள்ளது.

News image
Updated On :7 ஜூன் 2020, 4:55 am

விழுப்புரம் மாவட்டம் சின்ன கோட்டகுப்பத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரை மர்ம கும்பல் ஞாயிற்றுக்கிழமை வெட்டி கொலை செய்துள்ளது.

கொலை செய்யப்பட்ட நபர் புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த ரமேஷ்(40) என்பது கோட்டக்குப்பம் காவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடலை கைப்பற்றிய காவலர்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிந்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ரவுடிகளுக்குள் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.