மத வழிபாட்டுத் தலங்களை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

மதவழிபாட்டுத் தலங்களை திறக்கக் கோரி திருச்சியில் பல்வேறு அமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத வழிபாட்டுத் தலங்களை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
Published on
Updated on
1 min read

திருச்சி:  மதவழிபாட்டுத் தலங்களை திறக்கக் கோரி திருச்சியில் பல்வேறு அமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமுடக்கம் காரணமாக மூன்று மாதங்களுக்கு மேலாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளின்படி ஜூன் 8 -ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என அனுமதியளிக்கப்பட்டது.

ஆனால், தமிழக அரசு அதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் இருப்பதும், மத வழிபாட்டுத் தலங்களை திறக்காமல் இருப்பதும் மக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே, தமிழக அரசு உடனடியாக மூன்று மதங்களின் வழிபாட்டு தலங்களை உடனடியாக திறக்க வலியுறுத்தியும், மக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் சார்பாக பாலக்கரை ரவுண்டானா அருகில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர்கள் இப்ராஹிம்ஷா, முகமது அனிபா, மஞ்சக்குடி பாபு, ரமேஷ்,ஜோசப், முருகன் மற்றும் பொதுமக்கள் பதாகைகளை ஏந்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு கோஷங்களை எழுப்பினர்.

மேலும் மத வழிபாட்டுத் தலங்களை தாமதமின்றி தமிழக அரசு உடனே திறந்துவிட வேண்டும் என்றும், கடந்த மூன்று மாதங்களாக ஊதியமின்றி வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்படும் மூன்று மதங்களைச் சார்ந்த மதகுருமார்களுக்கு அவர்களின் சம்பளத் தொகையை அரசு அளித்திட வேண்டும்.

வழிபாட்டு தலங்களுக்கு வரும் மக்களுக்கு முக கவசம் மற்றும் கிருமிநாசினி போன்றவற்றை அரசின் செலவில் அளித்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளை திறந்து மக்களுக்கு வழிபடும் உரிமையை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மூன்று மதங்களைச் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பினர் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com