காய்கறி, பழங்களை சுத்தப்படுத்த SaaFoo பிராண்டை அறிமுகம் செய்யும் கவின்கேர்

உணவுப் பொருள்களைப் பாதுகாப்பாகத் தூய்மைப்படுத்தும் வழிமுறைகளை நுகர்வோர்கள் மேற்கொள்வதற்கு உதவும் வகையில் கவின்கேர் SaaFoo பிராண்டை சாஷே வடிவத்தில் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
காய்கறி, பழங்களை சுத்தப்படுத்த SaaFoo பிராண்டை அறிமுகம் செய்யும் கவின்கேர்
Published on
Updated on
1 min read

உணவுப் பொருள்களைப் பாதுகாப்பாகத் தூய்மைப்படுத்தும் வழிமுறைகளை நுகர்வோர்கள் மேற்கொள்வதற்கு உதவும் வகையில் கவின்கேர் SaaFoo பிராண்டை சாஷே வடிவத்தில் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், பாதுகாப்பான, சுகாதார மற்றும் தூய்மை வழிமுறைகளை எடுத்துச் செல்வதற்கான தனது முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கவின்கேர், காய்கறிகள் மற்றும் பழங்களை தொற்றுகளில் இருந்து காக்கும் வகையில், பயன்படுத்த எளிதான சாஷே வடிவத்தில் SaaFoo வாஷஸ் என்ற பிராண்டை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

காய்கறிகள் மற்றும் பழங்களைக் கழுவித் சுத்தப்படுத்த வெறும் நீரை மட்டுமே இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான குடும்பங்கள் பயன்படுத்துகின்றன. ஆனால், உணவு பொருள்களைப் மிகப் பாதுகாப்பாகத் தூய்மைப்படுத்தும் வழிமுறைகளை நுகர்வோர்கள் மேற்கொள்வதற்கு உதவும் வகையில் SaaFoo தயாரிப்புகள் சாஷே வடிவத்தில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. 

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பிராண்டு, அதன் கீழ் இரு பிரத்யேக தயாரிப்புகளைக் கொண்டிருக்கிறது. 

  • காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான SaaFoo வெஜ்ஜீஸ் அண்டு ஃபுரூட்ஸ் வாஷ் (மற்றும்) 
  • இறைச்சி மற்றும் கடல் உணவுகளுக்கான SaaFoo மீட் வாஷ்

நுகர்வோர்களின் தினசரி உணவு பாதுகாப்பு தேவைகள் பற்றிய சரியான கண்ணோட்டம் மற்றும் வலுவான ஆராய்ச்சி செயல்திறனைக் கொண்டிருக்கும் கவின்கேர் இறைச்சி மற்றும் கடல் உணவுகளுக்கென சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு தூய்மையாக்கல் திரவத்தை அறிமுகம் செய்கின்ற இந்தியாவின் முதல் நுகர்வோர் பிராண்டு என்ற பெயரைப் பெறுகிறது.  

நாம் பயன்படுத்துகின்ற உணவுப்பொருள்களில், தெரிந்தோ, தெரியாமலோ இருக்கக்கூடிய நச்சுயிரிகள், வேதிப்பொருட்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைக் கவனமாகவும், துல்லியமாகவும் அகற்றுவதற்காக SaaFoo வாஷஸ் தயாரிப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 100% உணவு தரவு உட்பொருட்களைக் கொண்டு இப்பொருட்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இத்திரவங்களைப் பயன்படுத்தித் தூய்மைப்படுத்துவதனால் உணவுப்பொருள்களில் எந்தவிதமான சுவை மற்றும் வாசனையில் மாற்றங்கள் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நுண்ணுயிரிகளுக்கு எதிரான பண்பியல்புகளுக்கு புகழ்பெற்ற ஆப்பிள் சிடர் வினிகர், வேம்பு, உப்பு மற்றும் மஞ்சளின் நன்மைத்தனத்தை ஒருங்கிணைத்து புதிய, பசுமையான உணவுப்பொருள்களின் மேற்புறத்திலுள்ள மாசுக்களை மற்றும் நுண்ணுயிரிகளை அகற்றி, தூய்மைப்படுத்துவதற்கென SaaFoo உருவாக்கப்பட்டுள்ளது. பேரஃபின், சல்ஃபேட், ப்ளீச், சோப், நறுமணப் பொருட்கள் மற்றும் நிறமூட்டிகள் ஆகிய எதுவுமே இத்தயாரிப்பு பொருட்களில் சேர்க்கப்படவில்லை.  

100 சதவிகிதம் உணவு தரத்திலான உட்பொருட்களைக் கொண்டு இவைகள் தயாரிக்கப்படுகின்றன. சாஷே வடிவில் மட்டுமன்றி, SaaFoo வாஷ் தயாரிப்பானது, 500 மி.லி. பேக் வடிவிலும் கிடைக்கும். வெஜிடபிள் & ஃபுரூட் வாஷ் 500 மி.லி. பேக்கின் விலை ரூ.99 மற்றும் மீட் வாஷ் 500 மி.லி. பேக்கின் விலை ரூ.120 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நாடெங்கிலும் அனைத்து முன்னணி ரீடெய்ல் அவுட்லெட்கள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ், பலசரக்கு கடைகள் மற்றும் மின்-வர்த்தக செயல்தளங்களிலும் இவைகள் கிடைக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com