கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சங்ககிரி சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன. 

News image

சங்ககிரி மலையடிவாரத்து சோமேஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

Updated On :18 ஜூன் 2020, 1:24 pm


சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன. 

அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில்  உள்ள சுவாமிகள், நந்தி பகவான் சுவாமிகளுக்கு பிரதோஷத்தையொட்டி பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் யாரும் செல்லவில்லை. ஆகம விதிகளின்படி கோயிலின் அர்ச்சகர் மட்டும் பூஜைகளை செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.