இ-பாஸ் இல்லாமல் கோவை வந்து பணியாற்றிய சென்னை தொழிலாளர்கள்: நகைக்கடைக்கு சீல்

சென்னையிலிருந்து முறையான அனுமதி இல்லாமல் வந்து கோவை நகைக்கடையில் பணியாற்றிய தொழிலாளர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இ-பாஸ் இல்லாமல் கோவை வந்து பணியாற்றிய சென்னை தொழிலாளர்கள்: நகைக்கடைக்கு சீல்

கோவை: சென்னையிலிருந்து முறையான அனுமதி இல்லாமல் வந்து கோவை நகைக்கடையில் பணியாற்றிய தொழிலாளர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள ஒரு நகைக்கடையில் சென்னையைச் சேர்ந்த தொழிலாளர்கள் முறையான அனுமதியின்றி வந்து தங்கிப் பணியாற்றி வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து காவல்துறை,  வருவாய்த் துறை அதிகாரிகளுடன் அங்கு சென்று விசாரித்தபோது, சென்னையைச் சேர்ந்த 20 பெண்கள் உள்ளிட்ட 39 தொழிலாளர்கள் இ-பாஸ் பெறாமல் வந்து பணி புரிந்தது தெரியவந்தது. 

சென்னையில் கரோனா தொற்று அதிகளவில் இருப்பதால் இவர்களுக்கும் நோய்த் தொற்று இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்திய அதிகாரிகள், அனைவருக்கும் அங்கேயே கரோனா பரிசோதனை நடத்தினர். தூய்மைப்பணிகளுக்குப் பிறகு அந்த கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com