தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பத்தாம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் ஒப்படைக்கும் பணி தொடக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கிடும் பொருட்டு காலாண்டு அரையாண்டு விடைத்தாள்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :22 ஜூன் 2020, 8:30 am

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கிடும் பொருட்டு காலாண்டு அரையாண்டு விடைத்தாள்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் திருச்செங்கோடு இணைந்து கல்வி மாவட்டங்கள் உள்ளன. நீர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 20 ஆயிரத்து 303 மாணவர்கள் எழுத இருந்தனர். 

கரோனா தொற்று பரவல், பொது முடக்கம் போன்றவற்றால் தேர்வு நிறுத்தப்பட்டதுடன் அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை யடுத்து காலாண்டு தேர்வு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு  அடிப்படையில் மதிப்பெண்களை கணக்கிட கல்வித்துறை மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. இதேபோல் பதினோராம் வகுப்பில் வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களை எழுதாத மாணவ, மாணவியரின் காலாண்டு, அரையாண்டு  விடைத்தாள்களை பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

அதனடிப்படையில் இப்பணி திங்கள்கிழமை தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 303 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள்,  முதல்வர்கள் விடைத்தாள்களை ஒப்படைக்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நாமக்கல் டிரினிடி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் மூ.ஆ. உதயகுமார் திங்கள்கிழமை காலை 25 பள்ளிகளிடம் இருந்து விடைத்தாள்கள், மதிப்பெண் பதிவேடு, மதிப்பெண் பட்டியல் உள்ளிட்டவற்றை நேரடியாக சமர்ப்பித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.