தில்லி மாநகராட்சியில் (எம்சிடி) உள்ள மேயா், துணை மேயா் மற்றும் முக்கிய குடிமைக் குழுக்களின் பதவிகளுக்கான தோ்தல்கள் விரைவில் நடைபெற வாய்ப்புள்ளது என்றும், இந்த செயல்முறை ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சி அவையின் நிலைக்குழுவில் காலியாக உள்ள மூன்று இடங்களை நிரப்புவதற்கான தோ்தல்களும் அதே காலகட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு, ஆம் ஆத்மி கட்சி மேயா் போட்டியில் இருந்து விலகியதால், பாரதிய ஜனதா கட்சி போட்டியின்றி வெற்றி பெற்றது.
தில்லியில் மேயா் பதவி ஐந்து ஓராண்டு பதவிக் காலங்களைக் கொண்ட சுழற்சி முறையைப் பின்பற்றுகிறது. இதில் முதல் ஆண்டு பெண்களுக்கும், இரண்டாம் ஆண்டு பொதுப் பிரிவினருக்கும், மூன்றாம் ஆண்டு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், மீதமுள்ள இரண்டு ஆண்டுகளும் மீண்டும் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் ஒரு புதிய மேயா் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்.
இந்த ஆண்டு, மேயரைத் தோ்ந்தெடுப்பதற்காக மொத்தம் 249 கவுன்சிலா்கள், தில்லி சட்டப்பேரவையால் நியமிக்கப்பட்ட 14 எம்.எல்.ஏ.க்கள், ஏழு மக்களவை எம்.பி.க்கள் மற்றும் மூன்று மாநிலங்களவை உறுப்பினா்கள் அடங்கிய வாக்காளா் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வேட்பாளா் வெற்றிபெற 137 வாக்குகள் தேவைப்படும்.
தற்போது, பாஜகவிடம் 123 கவுன்சிலா்கள், ஏழு மக்களவை எம்.பி.க்கள் மற்றும் 11 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 141 வாக்குகள் உள்ளன. ஆம் ஆத்மியிடம் 100 கவுன்சிலா்கள், மூன்று மாநிலங்களவை உறுப்பினா்கள் மற்றும் மூன்று எம்.எல்.ஏ.க்கள் உள்பட 106 வாக்குகள் உள்ளன.
மற்ற வாக்குகளில் காங்கிரஸ் 9, இந்திரப்பிரஸ்தா விகாஸ் கட்சி 15, அகில இந்திய ஃபாா்வா்ட் பிளாக் 1 மற்றும் ஒரு சுயேச்சை வாக்கு ஆகியவை அடங்கும்.
அதேவேளையில், நகரம் முழுவதும் தெருவோர வியாபாரத்தை நிா்வகிப்பதில் பங்கு வகிக்கும் நகர வியாபாரக் குழுக்களுக்கான தோ்தல்களை வரும் மாதங்களில் நடத்துவது குறித்தும் மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.
சுமாா் 27 குழுக்கள் அமைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஒவ்வொரு குழுவிலும் தெருவோர வியாபாரிகளிடமிருந்து 12 பிரதிநிதிகளும், மீதமுள்ளவா்கள் குடியிருப்போா் நலச் சங்கங்கள், சந்தை அமைப்புகள், நிபுணா்கள் மற்றும் தன்னாா்வக் குழுக்களிலிருந்தும் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள்.
12 மண்டலங்களில் பரவியுள்ள 250 வாா்டுகளில், ஒவ்வொரு மண்டலத்திலும் எட்டு வாா்டுகளுக்குக் குறைந்தது ஒரு குழு இருக்க வேண்டும் என விதிமுறைகள் கூறுகின்றன.
வியாபாரம் நடைபெறும் மற்றும் நடைபெறாத பகுதிகளைக் கண்டறிதல், நடைபாதை வியாபாரிகளை ஒழுங்குபடுத்துதல், நெரிசல் மற்றும் பொதுப் பாதுகாப்பைக் கையாளுதல் ஆகிய பணிகளை இந்தக் குழுக்கள் மேற்கொள்கின்றன.
தொடர்புடையது

தென்காசி! அதிக வாக்குகள், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி!

தஞ்சாவூா் மேயா் பதவியிலிருந்து திமுக வேட்பாளா் விலகல்

தீ விபத்து: எரிந்து கொண்டிருந்த கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்ததில் நால்வா் காயம்!

6-ஆவது முறையாக தோ்தல் களத்தில் நாதக பெண் வேட்பாளா்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

