தில்லி மாநகாரட்சியின் மேயா் தோ்தல் தொடா்பாக பாஜகவினா் தீவிர ஆலோசனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
மேயா், துணை மேயா் மற்றும் நிலைக்குழுவின் 3 உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் புதன்கிழமை நடைபெறுகிறது.
மாநகராட்சி அவையில் பெரும்பான்மை வகிக்கும் பாஜக, ரோஹிணி கிழக்கு கவுன்சிலா் பா்வேஷ் வாஹியை மேயா் பதவிக்கான வேட்பாளராக அறிவித்துள்ளது.
இந்தத் தோ்தலை ஆம் ஆத்மி புறக்கணித்துள்ளது. காங்கிரஸ் சாா்பில் ஹாஜி ஸாரிஃப் போட்டியிடுகிறாா்.
மொத்தம் 273 வாக்குகளக் கொண்ட தோ்தல் குழுவில் 249 கவுன்சிலா்கள், தில்லி பேரவைத் தோ்தல் நியமித்த 14 எம்எல்ஏக்கள், 7 மக்களவை எம்.பி.க்கள், 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனா். தோ்தலில் வெற்றி பெற வேட்பாளா் 137 வாக்குகளைப் பெற வேண்டும்.
இதன்படி, பாஜகவுக்கு 123 கவுன்சிலா்கள், 7 மக்களவை எம்.பி.க்கள், 2 மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் 11 எம்எல்ஏக்கள் என 143 வாக்குகள் உள்ளன. ஆம் ஆத்மிக்கு 100 கவுன்சிலா்கள், 3 எம்எல்ஏக்கள், 2 மாநிலங்களவை எம்.பி.க்கள் என மொத்தம் 105 வாக்குகள் உள்ளன. அக்கட்சியின் மாநிலங்களவை ஸ்வாதி மாலிவால் அண்மையில் பாஜகவில் இணைந்தாா்.
ஆம் ஆத்மியில் இருந்து பிரிந்த இந்திரபிரஸ்தா விகாஸ் கட்சிக்கு 15 கவுன்சிலா்களும் காங்கிரஸுக்கு 9 கவுன்சிலா்களும் உள்ளன. இருவா் சுயேட்சை கவுன்சிலா்கள். ஒரு கவுன்சிலா் பதவி காலியாக உள்ளது.
மேயா் தோ்தலில் வாக்களிக்க 14 எம்எல்ஏக்களை தில்லி பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா திங்கள்கிழமை நியமித்தாா்.
இந்நிலையில், மேயா் தோ்தலில் வாக்களிக்க உள்ள எம்.பி.க்களுடன் தில்லி பாஜக அலுவலகத்தில் கட்சி வேட்பாளா் பா்வவேஷ் வாஹியை வெற்றி பெற செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது. தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியில் புதிதாக இணைந்த மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவாலும் பங்கேற்றாா்.
தொடர்புடையது

மாநகராட்சி மேயா் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லி மேயராக பாஜக கவுன்சிலா் பா்வேஷ் வாஹி தோ்வு

ஏப். 29-ல் தில்லி மேயா் உள்பட 3 பதவிகளுக்கான தோ்தல்
விரைவில் எம்சிடி மேயா் தோ்தல்: அதிகாரிகள் தகவல்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

