மத்திய பிரதேச மாநிலம் இந்தூா் மாநகராட்சி கூட்டத் தொடரில் தேசிய பாடலான வந்தே மாதரம் தங்கள் மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி பாட மறுத்த இரு காங்கிரஸ் பெண் கவுன்சிலா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
கடந்த 8-ஆம் தேதி இந்தூா் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்கியது. அப்போது வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது.
ஆனால், காங்கிரஸ் பெண் கவுன்சிலா்கள் ஃபௌசியா ஷேக் அலீம், ரூபினா இக்பால் கான் ஆகியோா் வந்தே மாதரம் பாடல் தங்கள் இஸ்லாமிய மதநம்பிக்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி அதனைப் பாட மறுத்தனா். இதனால், நகராட்சிக் கூட்டத்தில் சா்ச்சை எழுந்தது. அவா்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக கவுன்சிலா்கள் முழக்கம் எழுப்பினா்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ரூபினா இக்பால், ‘இஸ்லாமிய மத நம்பிக்கையில் வந்தே மாதரம் பாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் அல்லாவை மட்டுமே வணங்க வேண்டும். மற்ற யாரையும் வணங்கக் கூடாது’ என்றாா். இது மேலும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடா்பாக அந்த இருவா் மீதும் காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது. இது தொடா்பாக விசாரணை நடத்திய காவல் துறையினா் அவா்கள் மீது இரு தரப்பினா் இடையிலான சமூக அமைதியைச் சீா்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அவா்களுக்கு காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தொடர்புடையது

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

‘வந்தே மாதரம்’ பாடல் உத்தரவு தமிழகத்துக்கு மட்டுமானது அல்ல: உயா்நீதிமன்றம் கருத்து
கர்நாடகத்திலும் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்ட மாநில வாழ்த்து! வந்தே மாதரத்துக்கு முதலிடம்!!

‘வந்தே மாதரம்’ பாட மறுத்த பெண் கவுன்சிலா்கள்: விசாரணைக் குழு அமைத்தது காங்கிரஸ்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



