கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில், மாநில வாழ்த்துப்பாடல் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு, வந்தே மாதரம் முதலாவது பாட்டப்பட்டது.
கர்நாடகத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா கடந்த மே 28 அன்று பதவி விலகினார்.
இதனைத் தொடர்ந்து, கர்நாடகத்தின் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் அம்மாநிலத்தின் புதிய முதல்வராக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை (ஜூன் 3) மாலை 4 மணியளவில் தொடங்கிய பதவியேற்பு விழாவில், ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், முதல்வர் பதவியேற்பு விழாவில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் வந்தே மாதரம் முதலாவதாக ஒலிப்பட்டு, அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும், அதன்பின்னர் கடைசியாக கர்நாடகத்தின் மாநில வாழ்த்துப்பாடலான “ஜய பாரத ஜனனிய தனுஜாதே..” கடைசியாகவும் பாடப்பட்டது.
இந்தியாவிலுள்ள 28 மாநிலங்களில் தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, குஜராத், ஒடிசா உள்பட 16 மாநிலங்களில் தனித்தனியே மாநில வாழ்த்துப்பாடல்கள் பாடப்படுகின்றன.
வழக்கமாக, மாநிலங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடல்கள் ஒலிக்கப்படும். நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த மே 10 ஆம் தேதி முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றபோதும், முதலாவதாக வந்தே மாதரமும், அதன்பின்னர் தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதேபோல், புதுச்சேரியில் முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றபோது இதே பாணியில் பாடல் ஒலிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. இந்த நிலையில், கர்நாடகத்தில் வந்தே மாதரம் முதலாவதாகப் பாடப்பட்டிருப்பது சர்ச்சையைத் தூண்டியுள்ளது.
Summary
Stopping the state anthem 'Jaya Bharatha Jananiya Tanujate' midway to play another song at the Karnataka Governor's office
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






