பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி!

தமிழ்நாடு பேரவையில் முதலில் எந்த பாடல் பாடப்படும் என்று விசிகவின் கேள்வி பற்றி...

ravikumar

ரவிக்குமார் - கோப்புப்படம்

Published On :

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு முன்பாக, முதலில் வந்தே மாதரம் இசைக்கப்படுமா? அல்லது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுமா? என்று விசிக எம்பி ரவிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முதல்முறையாக இன்று காலை 10 மணிக்கு ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் உரையுடன் கூடவுள்ளது.

இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு முன்பாக வந்தே மாதரம் இசைக்கப்படுமா? அல்லது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுவாக, சட்டப்பேரவைத் தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைப்பதும், முடிவில் தேசிய கீதம் இசைப்பதும் பேரவையில் மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆனால், முதலில் தேசிய கீதம் இசைக்கவில்லை என்று கூறி, முந்தைய திமுக ஆட்சியில் அப்போதைய ஆளுநா் ஆா்.என். ரவி வெளிநடப்பு செய்து வந்தாா்.

இதனிடையே, தற்போது ஆளுநரும் ஆட்சியும் மாறியிருக்கும் நிலையில், ஆளுநர் பங்கேற்கும் அனைத்துக் கூட்டங்களின் தொடக்கத்திலும் முடிவிலும் வந்தே மாதரம் இசைப்பதை கட்டாயமாக்கி மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, தவெக அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வுகளில் முதலில் வந்தே மாதரம், இரண்டாவது தேசிய கீதம், மூன்றாவது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் எழுப்பியிருந்தனர்.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதல்வர் ஜோசப் விஜய், தமிழ்நாட்டு நிகழ்வுகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடுவதற்கு விலக்கு கேட்டு கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலில் வந்தே மாதரம் இசைக்கப்படுமா? அல்லது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுமா? என்று விசிக எம்பி ரவிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Summary

'Vande Mataram' or 'Tamil Thai Vazhthu' first? VCK asks!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.