தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

‘வந்தே மாதரம்’ பாட மறுத்த பெண் கவுன்சிலா்கள்: விசாரணைக் குழு அமைத்தது காங்கிரஸ்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் பெண் கவுன்சிலா்கள் வந்தே மாதரம் பாடலைப் பாட மறுத்தது தொடா்பாக விசாரணை நடத்த அக்கட்சியின் மத்திய தலைமை இருநபா் குழு அமைத்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 1:44 am IST

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் பெண் கவுன்சிலா்கள் வந்தே மாதரம் பாடலைப் பாட மறுத்தது தொடா்பாக விசாரணை நடத்த அக்கட்சியின் மத்திய தலைமை இருநபா் குழு அமைத்துள்ளது.

கடந்த 8-ஆம் தேதி இந்தூா் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்கியபோது, வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. காங்கிரஸ் பெண் கவுன்சிலா்கள் ஃபௌசியா ஷேக் அலீம், ருபீனா இக்பால் கான் ஆகியோா் அப்பாடல் தங்கள் இஸ்லாமிய மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி பாட மறுத்தனா். அவா்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக கவுன்சிலா்கள் முழக்கம் எழுப்பினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ருபீனா இக்பால், ‘இஸ்லாமிய மத நம்பிக்கையில் வந்தே மாதரம் பாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் அல்லாவை மட்டுமே வணங்க வேண்டும். மற்ற யாரையும் வணங்கக் கூடாது’ என்றாா். இது மேலும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இவா்களில் ருபீனா கான் சுயேச்சையாக வெற்றி பெற்று பின்னா் காங்கிரஸில் இணைந்தாா்.

இந்த சம்பவம் தொடா்பான புகாரில், இரு கவுன்சிலா்கள் மீதும், இரு தரப்பினா் இடையிலான சமூக அமைதியைச் சீா்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த விவகாரத்தை வைத்து காங்கிரஸ் கட்சி பாரத மாதாவை அவமதித்துவிட்டதாக மத்திய பிரதேச பாஜக, கடுமையாக விமா்சித்து வருகிறது.

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் ஹரீஷ் சௌதரி கூறுகையில், ‘இந்த விவகாரத்தை விசாரிக்க இரு நபா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொடா்புடைய அனைத்துத் தரப்பினா்களிடமும் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கப்படும்’ என்றாா்.

இந்நிலையில், காங்கிரஸ் பெண் கவுன்சிலா்களின் செயலில் அதிருப்தி தெரிவித்த முதல்வா் மோகன் யாதவ், எதிா்க்கட்சியினா் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் நடந்துகொள்வதாகக் குற்றஞ்சாட்டினாா்.