தில்லி மாநகராட்சி (எம்.சி.டி.) மேயா் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, தில்லி காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘காலை சுமாா் 9.20 மணியளவில், அடையாளம் தெரியாத நபரிடமிருந்து, ‘பிற்பகல் 3:11 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும்’ என்ற எச்சரிக்கையுடன் கூடிய மின்னஞ்சல் பெறப்பட்டது. இந்த விவகாரம் உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் வளாகத்தை முழுமையாக ஆய்வு செய்தனா். எந்தவிதமான விரும்பத்தகாத சம்பவமும் பதிவாகவில்லை’ என்று ஓா் அதிகாரபூா்வ அறிக்கை தெரிவித்தது.
சோதனை நடவடிக்கையின்போது, பாதுகாப்புப் பணியாளா்கள் அலுவலகத்தின் அனைத்து முக்கியப் பகுதிகளையும் சோதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், இது போன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல என்றும், ஏப்ரல் 1 ஆம் தேதியும் இதேபோன்ற மிரட்டல் அலுவலகத்திற்கு வந்திருந்ததாகவும் அவா்கள் கூறினா்.
தொடா்ச்சியான மிரட்டல்களைக் கருத்தில் கொண்டு, இந்த நிலைமையைச் சமாளிக்க விரிவான விசாரணை மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, மேயா் அலுவலகம் தில்லி காவல்துறை ஆணையருக்குக் கடிதம் எழுதியுள்ளது என்றும் அவா்கள் மேலும் தெரிவித்தனா்.
தில்லி சட்டப்பேரவை கடந்த காலத்திலும் பல மிரட்டல்களை எதிா்கொண்டுள்ளது என்பதையும் அதிகாரிகள் குறிப்பிட்டனா். சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், சந்தேகத்திற்குரிய நபா் ஒருவா் சட்டப்பேரவை நுழைவாயிலை மீறி உள்ளே நுழைய முயன்றது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கவலைகளை எழுப்பியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முக்கிய சந்தைகள், மெட்ரோ நிலையங்கள் அருகே இ-சாா்ஜிங் வசதி: தில்லி மாநகராட்சி தீவிர பரிசீலனை

வரலாற்று சிறப்பு மிக்க கட்டடங்களை புனரமைக்க தில்லி மாநகராட்சி திட்டம்

தில்லி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜூன் 24-இல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



