தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

சொத்துவரியுடன் வணிக உரிமை கட்டணம் இணைப்பு: எம்சிடி அறிவிப்பு

News image

தில்லி மாநகராட்சி

Updated On :3 மே 2026, 3:04 am IST

பொது வணிகம் மற்றும் சேமிப்பு உரிமை கட்டணத்தை சொத்து வரி அமைப்புடன் ஒருங்கிணைக்க முடிவெடுத்துள்ளதாக தில்லி மாநகராட்சி (எம்சிடி) சனிக்கிழமை அறிவித்தது.

இந்தத் திட்டத்துக்கு தில்லி மாநகராட்சி ஆணையா் ஒப்புதல் அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வரி செலுத்துவதில் குடியிருப்பாளா்கள் மற்றும் தொழில்நடத்துவோருக்கு எளிய நடைமுறையைக் கொண்டு வரும் வகையில் தனி உரிமம் விண்ணப்பத்தை விண்ணப்பிக்க தேவையில்லை.

இந்தப் புதிய முறையில், சொத்து உரிமையாளா்கள் மற்றும் வாடகைதாரா்கள் தனித்துவ சொத்து அடையாள குறியீடு (யுபிஐசி) மூலம் தில்லி மாநகராட்சி இணையதளத்தில் சொத்து வரியுடன் உரிம கட்டணத்தை செலுத்த முடியும்.

இதற்கான உத்தரவு வெளியிடப்பட்ட நிலையில், அடுத்த சில நாள்களில் இந்த முறை அமலுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.