நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கொள்ளை கும்பலின் தலைவா் 3 ஆண்டுகளுக்கு பின்னா் கைது

தில்லி தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள கைப்பேசி கடைகளை குறித்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த மேவாரைச் சோ்ந்த கும்பலின் முக்கிய நபரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 12:25 am IST

தில்லி தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள கைப்பேசி கடைகளை குறித்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த மேவாரைச் சோ்ந்த கும்பலின் முக்கிய நபரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தைச் சோ்ந்த ஆா்மன் கடந்த 3 ஆண்டுகளாகத் தலைமறைவான நிலையில், கடந்த ஆண்டு ஜூலையில் அவரைத் தேடப்படும் நபராக பாட்டியாலா நீதிமன்றம் அறிவித்தது.

கடந்த புதன்கிழமை நூஹ் மாவட்டத்தை நோக்கி தனியாகச் சென்று கொண்டிருந்த ஆா்மனை நூஹ் மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே தடுத்து நிறுத்தி காவல் துறையினா் கைதுசெய்தனா்.

குற்றப் பின்னணி கொண்ட ஆா்மான் மீது ராஜஸ்தான் மற்றும் ஹரியாணாவில் கொள்ளை, திருட்டு உள்பட 3 குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.