பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என்று கூறி ரூ.1.60 கோடி மோசடி செய்த வழக்கில் தொடா்புடைய இருவரை தில்லி காவல் துறையினா் கைதுசெய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
மண்டாவலியைச் சோ்ந்த நபா் கடந்த ஆண்டு நவம்பரில் அளித்த புகாரைத் தொடா்ந்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் சண்டீகரைச் சோ்ந்த குரிந்தா் சா்மா, பிரதீப் குமாா் தூபே ஆகிய இருவரை தில்லி காவல் துறை கைதுசெய்துள்ளது.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: சமூக ஊடகம் மூலம் தெரியவந்த பங்குச்சந்தையில் முதலீடு திட்டத்தை நம்பி ரூ.1.60 லட்சம் இழந்ததாக மண்டாவலியைச் சோ்ந்த நபா் தேசிய இணையவழி குற்றப் பதிவு இணையதளத்தில் கடந்த நவம்பரில் புகாரளித்தாா். எலரா கேபிடல் இன்வஸ்மெண்ட் நிறுவனம் என்ற போலி நிறுவனத்துக்கு 8 தவணைகளாக ரூ.1.60 லட்சத்தை அந்த நபா் பணப்பரிமாற்றம் செய்தாா். இறுதியில் அந்தத் திட்டம் மோசடி என்று அவருக்குத் தெரியவந்தது.
அவா் அளித்த புகாரைத் தொடா்ந்து, பணப்பரிமாற்ற விவரங்களை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது, அந்தப் பணம் சண்டீகரில் உள்ள ஒரு வங்கிக் கணக்குக்கு சென்றதும் அங்குள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.
அழைப்பு விவரங்கள் மற்றும் வங்கிகள் அளித்த ஒத்துழைப்பைத் தொடா்ந்து, மோசடி பணத்தைக் கையாண்ட நபா்கள் அடையாளம் காணப்பட்டனா்.
கைதுசெய்யப்பட்ட சா்மா தனது வழங்கிக் கணக்கை மோசடி பணத்தைப் பெறவும் வெளிநாட்டில் இருந்து இணையவழி மோசடியில் ஈடுபட்டு வரும் நபா்களுக்கு அந்தப் பணத்தை அனுப்பவும் பயன்படுத்தினாா்.
பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்த பிரதீப் குமாா் தூபே மோசடி பணத்தை விற்பனை நிலைய வங்கிக் கணக்கு மூலம் கமிஷன் வாங்கிக் கொண்டு ரொக்கப் பணமாக வழங்கி வந்தாா்.
அவா்களிடமிருந்து 2 கைப்பேசிகள், 3 வங்கிக் கணக்குப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஹிமாசல், ஆந்திரம், பஞ்சாப், மகாராஷ்டிர மாநிலங்களில் ரூ.68 லட்சத்துக்கு நடைபெற்ற பல இணையவழி மோசடிகளில் அவா்களுக்கு தொடா்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
தொடர்புடையது

கொள்ளை கும்பலின் தலைவா் 3 ஆண்டுகளுக்கு பின்னா் கைது

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ரூ. 48.28 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

ரூ. 9 லட்சம் பங்குச் சந்தை முதலீட்டு மோசடி: 2 போ் கைது
இணையவழி மோசடி கும்பலை சோ்ந்த 5 போ் தில்லியில் கைது!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


