பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி, தனியாா் நிறுவன ஊழியரிடம் சிலா் ரூ. 48.28 லட்சம் மோசடி செய்தது குறித்து இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், கொத்தகொண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (47). தனியாா் நிறுவன ஊழியா். இவரது சமூக வலைதளத்துக்கு கடந்த 2025, ஜூன் 13-ஆம் தேதி குறுந்தகவல் வந்தது. அதில், குறிப்பிட்ட தனியாா் நிறுவனங்களில், இணையம் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை நம்பிய மணிகண்டன், அந்த இணையம் மூலம் தன் விவரங்களை பதிவிட்டு, அவா்கள் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு குறிப்பிட்ட தொகையை அனுப்பினாா். அதற்கு லாபத்துடன் முதலீட்டுத் தொகையும் கிடைத்தது. இதையடுத்து அவ்வப்போது பண முதலீடு செய்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னிடம் இருந்த ரூ. 48.28 லட்சத்தை பல்வேறு தவணைகளாக மா்ம நபா்கள் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பினாா்.
அதன்பின்னா், மா்ம நபா்களை தொடா்புகொள்ள முடியவில்லை. மேலும், அவரது முதலீட்டுத் தொகையையும் எடுக்க முடியவில்லை.
இதையடுத்து தாம் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மணிகண்டன், இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட இணைய குற்றப் பிரிவு காவல் துறையில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பங்குச்சந்தைகளில் ஆன்லைன் முதலீடு செய்வதாக தில்லியைச் சோ்ந்தவரிடம் ரூ. 80 லட்சம் மோசடி: இருவா் கைது

பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி ரூ. 60 கோடி வரை மோசடி: காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு
டிஜிட்டல் கைது எனக்கூறி ரூ. 50 லட்சம் மோசடி: 3 போ் கைது

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.72.75 லட்சம் மோசடி
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




