போடியில் சார்பு ஆய்வாளர், நகராட்சி ஊழியர் உட்பட 14 பேருக்கு தொற்று உறுதி: காவல் நிலையம் மூடப்பட்டது
போடியில் செவ்வாய் கிழமை, காவல் சார்பு ஆய்வாளர், நகராட்சி ஊழியர் உட்பட 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


போடியில் செவ்வாய் கிழமை, காவல் சார்பு ஆய்வாளர், நகராட்சி ஊழியர் உட்பட 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போடி நகர் காவல் நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
போடி நகர் காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன் கடனுக்கு பொறுப்பேற்றவரை குடும்பத்துடன் கடத்திய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை போடி நகர் காவல் நிலையத்தில் வைத்து ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் உட்பட காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் இவர்களை காவலர்கள் சிலர் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 4 பேர்களில் ஒருவருக்கு கரோனா தீநுண்மி தொற்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கைதிகளிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் உட்பட 30 பேருக்கு கரோனா தொற்று குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் உட்பட 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தேனி மாவட்ட திட்ட அலுவலரும், போடி நகராட்சி கரோனா தடுப்பு பொறுப்பு அலுவலருமான திலகவதி, போடி நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர் நல அலுவலர் ராகவன் உள்ளிட்ட அதிகாரிகள் போடி நகர் காவல் நிலையத்தை ஆய்வு செய்து காவல் நிலையத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றினர்.
பின்னர் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. காவல் நிலையத்தில் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. வேறு இடத்தில் காவல் நிலையம் தற்காலிகமாக செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் போடி நகராட்சி அலுவலகத்தில் ஒருவருக்கும், போடிஅரசு மருத்துவமனை ஊழியர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையிலிருந்து வந்த 4 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...