தூத்துக்குடி: சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வருபவர் ஜெயராஜ்(56). இவருடைய மகன் பென்னிக்ஸ்(31). கடந்த 19-ஆம் தேதி இரவு ஊரடங்கு விதிகளை மீறி கடைதிறந்ததாக இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சப்-ஜெயிலில் விசாரணை கைதியாக சாத்தான்குளம் காவலர்கள் அடைத்தனர்.
இந்தநிலையில் பென்னிக்ஸ், ஜெயராஜூம் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணை கைதியாக இருந்த அவர்களின் உயிரிழப்புக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் புதன்கிழமை 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் வினாயகமூர்த்தி கூறுகையில், சாத்தான்குளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.2 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் இனியும் நடக்காமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


