
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பொது முடக்க விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாகக் கூட்டமாக இருந்த திருமண மண்டபத்துக்கு மாநகராட்சி அலுவலர்கள் புதன்கிழமை அபராதம் விதித்தனர்.
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காகச் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, திருமண விழாவில் 50 பேருக்குள் இருக்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், தஞ்சாவூர் சீனிவாசபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் ஏறத்தாழ 200 பேர் இருந்ததாக மாநகராட்சி அலுவலகத்துக்குப் புகார் சென்றது.
இதையடுத்து, மாநகராட்சி அலுவலர்கள் நிகழ்வு இடத்துக்குச் சென்று கண்காணித்தனர். அப்போது, அளவுக்கு அதிகமாகக் கூட்டம் இருந்ததால், திருமண மண்டப நிர்வாகத்துக்கு மாநகராட்சி அலுவலர்கள் ரூ. 1,000 அபராதம் விதித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.