எனவே அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்க வேண்டும். அதுவரை ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்த தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் 8 சதவீத வீடுகளில் மட்டுமே இணையதள இணைப்புடன் கூடிய கணினி வசதி உள்ளது. ஆன்லைன் முறையில் பாடம் நடத்துவதால் நகர்புற, கிராமப்புற மற்றும் ஏழை பணக்கார மாணவர்களுக்கு இடையே சமநிலையற்ற நிலை உருவாகியுள்ளது.
மேலும் முறையான ஆன்லைன் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவர்களும், ஆசிரியர்களும் சவால்களையும், இடையூறுகளையும் சந்திக்கின்றனர். எனவே மாணவ மாணவிகள் ஆபாச இணையதளங்களை பார்ப்பதைத் தடுக்கும் வகையில், சட்ட விதிகளின்படி, முறையான விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புக்களை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.