அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காவலர்கள் தெரிவித்தனர்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:51 pm

DIN


ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காவலர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டிஜி போலீஸ் தில்பாக் சிங் கூறுகையில், தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி  மறைந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து ராணுவம், காவலர்கள் மற்றும் சிஆர்பிஎஃப்  வீரர்கள் இணைந்து பயங்கரவாதிகள் மறைந்திருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். பாதுகாப்புப் படை வீரர்கள் சுற்றி வளைத்ததை அறிந்த பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதில், ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான், அவனிடம் இருந்து ஒரு ஏ.கே 47 துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது" என்று தில்பாக் சிங் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.