தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவாரூரில் மேலும் 28 பேருக்கு கரோனா

திருவாரூரில் மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2020, 5:55 am

DIN


திருவாரூரில் மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கரோனா தொற்று பரவி வருவதைத் தொடா்ந்து, சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து திருவாரூா் வருவோா் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனா். இவா்களில் கரோனா தொற்று உள்ளவா்கள் சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அந்த வகையில், புதன்கிழமை வரை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி திருவாரூா் மாவட்டத்தில் 272 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அனைவரும் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 322-ஆக உயா்ந்துள்ளது. இதில், 121 போ் வீட்டுக்குத் திரும்பிய நிலையில், 156 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.