கரோனா: தெலங்கானா தொற்று பாதிப்பு 1634 ஆக உயர்வு
தெலங்கானாவில் செவ்வாய்க்கிழமை மேலும் நாற்பத்திரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மாநிலத்தின் பாதிப்பு எண்ணிக்கை 1634 ஆக உயர்ந்துள்ளது.


ஹைதராபாத்: தெலங்கானாவில் செவ்வாய்க்கிழமை மேலும் நாற்பத்திரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மாநிலத்தின் பாதிப்பு எண்ணிக்கை 1634 ஆக உயர்ந்துள்ளது.
"மாநிலத்தில் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1634 ஆக உயர்ந்துள்ளது, இதில் 1011 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 585 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்புக்கு இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர்என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 1,06,475 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது, 60,864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 39,174 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 3,302 பேர் பலியாகியுள்ளனர் என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...