இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

‘மகாராஷ்டிரத்தில் அடுத்தாண்டு வரை தேர்வுகள் இல்லை’ : கல்வித்துறை அமைச்சர்

மகாராஷ்டிரத்தில் அடுத்தாண்டு மே மாதம் வரை 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :6 நவம்பர் 2020, 9:31 am

PTI

மகாராஷ்டிரத்தில் அடுத்தாண்டு மே மாதம் வரை 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் வர்ஷா கூறியதாவது,

“கரோனா தொற்றின் பரவல் இன்னும் குறையவில்லை. தற்போதைய நிலைமை சீரடைய சிறிது காலம் தேவைப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்தாண்டு மே மாதத்திற்கு முன்பு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை நடத்த முடியாது. 

ஆசிரியர்கள் மீதமுள்ள பாடங்களை முடிக்க ஏதுவாக பாடத்திட்டத்தை எவ்வளவு தவிர்க்கலாம் என்பது குறித்து விவாதிக்க உள்ளோம். நடப்பாண்டு பாடத்திட்டத்தில் இருந்து குறைந்தது 25 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.