ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை

அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :6 நவம்பர் 2020, 4:06 pm

DIN

அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளரும், அதிபருமான டிரம்ப் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

அலாஸ்கா, நெவாடா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

ஜார்ஜியா மாகாணத்தில் இருவருக்கும் இடையே பெரிய அளவில் வாக்குகள் வித்தியாசமின்றி இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது ஜோ பிடன் டிரம்ப்பை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் இருந்தார்.

இதையடுத்து ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த ட்ரம்ப் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்த நிலையில் தற்போது மாகாண அரசு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இந்த முறை நடந்த அமெரிக்கத் தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை நடப்பது இதுவே முதல்முறை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.