ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி வட்டாரப் பகுதிகளில் 2 ஆம் நாளாகத் தொடர்மழை

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து 2 ஆம் நாளாக வியாழக்கிழமை அதிகாலை 4 மணிமுதல் தொடர்மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்

News image
அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியில் தொடங்கி இடைவிடாது காலை 10 மணிக்கும் பெய்து கொண்டிருந்த மிதமான மழை.
Updated On :6 நவம்பர் 2020, 7:05 am

DIN


அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து 2 ஆம் நாளாக வியாழக்கிழமை அதிகாலை 4 மணிமுதல் தொடர்மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு(அதிகாலை) முதல் இடைவிடாமல் தொடர்மழை பெய்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அருப்புக்கோட்டையில் 31 மி.மீ மழையும் திருச்சுழியில் 66 மி.மீ மழையும்,கோவிலாங்குளத்தில் 38.8 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடிவரையிலான பல்வேறு கிராமங்களில் பெருவாரியான விவசாயிகள் தற்போது வாழை,உளுந்து மற்றும் பாசிப்பயறு சாகுபடி செய்து வருவதால் மகசூல் பெருகுமெனவும்,தொடர்மழை காரணமாக நிலத்தில் நல்ல ஈரம் பாய்ந்துள்ளதால்,தை மாத அறுவடைக்குக் கிடைக்கும் விதமாக அடுத்தக்கட்ட  சாகுபடிக்கும் விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதனால் விவசாயிகள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.