ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி கொடுத்து தீபாவளி கொண்டாடிய சமூக ஆர்வலர்

தீபாவளிக்கு மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி கொடுத்து தீபாவளியை கொண்டாடிய சமூக ஆர்வலரை பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

News image
மாற்றுத்திறனாளிக்கு தீபாவளி பரிசாக  வழங்கிய சக்கர நாற்காலி
Updated On :13 நவம்பர் 2020, 2:50 pm

DIN

சூலூர்: தீபாவளிக்கு மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி கொடுத்து தீபாவளியை கொண்டாடிய சமூக ஆர்வலரை பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மணி (வயது 43) என்பவர் மிகவும் வறுமையான சூழலில் வாழ்ந்து வந்தார். அவருக்கு இருசக்கர சக்கர நாற்காலி வாகனம் தேவை என அப்பகுதியினர் சூலூர் தோழியர் அமைப்பினரை தொடர்புகொண்டு தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து அந்த அமைப்பின் நிர்வாகியான வெற்றிச்செல்வி தீபாவளியைக் கொண்டாடும் விதமாக மாற்றுத்திறனாளி மணிக்கு சக்கர நாற்காலியை வழங்கிக் கொடுத்தார்.

இதைப்பற்றி அவரிடம் கேட்டபோது, “கரோனா தொற்றுநோய் காலத்தில் பொதுமக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கின்றனர், ஆகவே இந்த ஆண்டு பட்டாசு வாங்காமல் மாற்றுத்திறனாளிக்கு என்னால் இயன்ற உதவியை செய்தேன்” என தெரிவித்தார்.

இச்செயலை அப்பகுதியினர் வெகுவாகப் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.