எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஜம்மு-காஷ்மீர் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர்

ஜம்மு-காஷ்மீரில் நக்ரோட்டா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையிலான துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த காவலர்களை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேரில் சந்தித்தார்.

News image
மருத்துவமனைக்கு வந்து வீரர்களின் உடல்நலம் குறித்து விசாரித்த துணைநிலை ஆளுநர்
Updated On :19 நவம்பர் 2020, 11:53 am

ANI

ஜம்மு-காஷ்மீரில் நக்ரோட்டா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையிலான துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த காவலர்களை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேரில் சந்தித்தார்.

ஜம்மு - காஷ்மீரின் நக்ரோட்டா மாவட்டத்திலுள்ள பான் சோதனைச் சாவடியில் இருந்த காவலர்கள் மீது தீவிரவாதிகள் இன்று அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பின்னர் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் குல்தீப் ராஜ், முகமது இசாக் ஆகிய இரண்டு காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்த காவலர்கள் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் மருத்துவமனைக்கு நேரில் சென்று வீரர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.