கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாகர்கோவிலில் அதிமுக எம்.பி. வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஏ.விஜயகுமார் வீட்டின் முன்பு செவ்வாய்க்கிழமை நாட்டு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image

எம்.பி. வீட்டின் முன்பு கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு

Updated On :24 நவம்பர் 2020, 7:35 am

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஏ.விஜயகுமார் வீட்டின் முன்பு செவ்வாய்க்கிழமை நாட்டு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த ஏ.விஜயகுமார்  அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இவர் நாகர்கோவில் ராமவர்மபுரம் மேற்கு தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை விஜயகுமாரின் வீட்டின் முன்பு சாலை ஓரத்தில் பந்து போன்ற உருண்டை வடிவில் மர்ம பொருள் கிடப்பதை பார்த்த விஜயகுமார் எம்.பி.யின் கார் ஓட்டுநர் ரிஜூ அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அங்கு வந்த நேசமணி நகர் காவலர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பொருளைக் கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் ஐஸ்கிரீம் பந்தில் வெடிமருந்தை நிரப்பப்பட்டிருந்தது தெரிய வந்தது.

எம்.பி. வீட்டின் முன் விசாரணை நடத்தும் காவல்துறையினர்

எம்.பி. வீட்டின் முன் விசாரணை நடத்தும் காவல்துறையினர்

இந்த வெடிகுண்டு பந்தை வீசிச் சென்றது யார் என்பது குறித்து நேசமணி நகர் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதிமுக எம்.பி.யின்வீட்டு முன்பு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.