சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் இளம் பெண்களில் 58 சதவீதம் பேர் பாலியல் தொந்தரவை சந்திப்பதாக தனியார் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் சிறுமிகளுக்கான உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்காக செயல்படும் தனியார் தொண்டு நிறுவனமான பிளான் இன்டர்நேஷனல், சர்வதேச பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு நடத்திய கணக்கெடுப்பில் இணையதளம் உபயோகிக்கும் பெண்களில் 58 சதவீதம் பேர் பாலியல் தொந்தரவை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளனர்.
இந்த கணக்கெடுப்பானது, பிரேசில், இந்தியா, நைஜீரியா, ஸ்பெயின், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா உள்பட 22 நாடுகளில் உள்ள 15 முதல் 25 வயதுடைய 14 ஆயிரம் இளம் பெண்கள் இந்த ஆய்வில் வாக்களித்துள்ளனர்.
அதில் அதிகபட்சமாக சமூக ஊடகங்கள் வாயிலாக முகநூலில் 39 சதவீதமும், அதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் 23 சதவீதமும், வாட்ஸ்அப் 14 சதவீதமும், ஸ்னாப்சாட்டில் 10 சதவீதமும், ட்விட்டரில் 9 சதவீதமும் மற்றும் டிக்டாகில் 6 சதவீதமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்மூலம், இளம் பெண்களில் ஐந்தில் ஒருவர் சமூக ஊடகங்களை உபயோகிக்கும் பழக்கத்தை நிறுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் முகநூல், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் ட்விட்டரில் ஏற்படும் இதுபோன்ற பாலியல் பிரச்னைகளை சந்திக்கும் பெண்கள் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு கடிதம் எழுதி உலகம் முழுவதும் ஏற்படும் பாலியல் முறைக்கேட்டை வெளிப்படுத்த வேண்டும் என பிளான் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாகி, அன்னே-பிர்கிட் ஆல்பிரெக்சென் அழைப்பு விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!

சொல்லப் போனால்... பெட்டிக்குள் உறங்கும் பூதம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


