ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பிகாரில் எருமை மீது அமர்ந்து பிரசாரம் செய்த வேட்பாளர் கைது

பிகார் தேர்தலை முன்னிட்டு பிரசாரம் செய்ய எருமை மீது அமர்ந்து வந்த வேட்பாளரைக் காவல்துறையினர் கைது செய்து பின்னர் ஜாமீனில் வெளிவிட்டனர்.

News image
எருமை மீது பிரசாரத்திற்கு வந்த மன்சூரி
Updated On :22 அக்டோபர் 2020, 10:39 am

DIN

பிகார் தேர்தலை முன்னிட்டு பிரசாரம் செய்ய எருமை மீது அமர்ந்து வந்த வேட்பாளரைக் காவல்துறையினர் கைது செய்து பின்னர் ஜாமீனில் வெளிவிட்டனர்.

பிகார் தேர்தலில் கயா நகர தொகுதியில் ராஷ்டிரிய உலமா கவுன்சில் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பர்வேஸ் ஆலம் என்றும் அழைக்கப்படும் மன்சூரி. 

இவர் வேட்பாளர்களை கவர்வதற்காக எருமை மீது ஏறி பிரசாரத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, அவர் மீது விலங்குகளுக்கு கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கரோனா விதிமுறைகளை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து, பின்னர் பிணையில் விடுவித்தனர்.

இதுகுறித்து மன்சூரி கூறுகையில், என்னிடம் பிரசாரத்திற்கு செல்ல சொந்தமாக கார் இல்லை, ஒரு எருமை மட்டுமே உள்ளது. என்னால் வாடகைக்கு கார் எடுக்க முடியாததால் என்னிடம் உள்ள எருமை மீது ஏறி பிரசாரத்திற்கு வந்தேன் என தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.