சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஆப்கனில் பாதுகாப்புப் படை வீரர்கள் 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் நிம்ரோஸ் மாகாணத்தில் தலிபான் தாக்குதலில் 20 க்கும் மேற்பட்ட ஆப்கானிய பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

News image

கோப்புப்படம்

Updated On :23 அக்டோபர் 2020, 9:34 am

ஆப்கானிஸ்தானின் நிம்ரோஸ் மாகாணத்தில் தலிபான் தாக்குதலில் 20 க்கும் மேற்பட்ட ஆப்கானிய பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

காஷ்ரோட் ஆளுநர் ஜலீல் அஹ்மத் வட்டாண்டோஸ்ட் கூறுகையில், காஷ்ரோட் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு இந்த தாக்குதல் நடைபெற்றது. இதில், 20க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகியுள்ளனர், மேலும் 6 வீரர்களை பிணைக் கைதிகளாக தலிபான்கள் கொண்டு சென்றுள்ளதாக கூறினார்.

தோஹாவில் அமைதி பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்த போதிலும் நாடு முழுவதும் சுமார் 24 மாகாணங்களில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.