தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புதுச்சேரியில் கடைகள் திறந்திருக்கும் நேரம் இரவு 10 மணி வரை நீட்டிப்பு

புதுச்சேரியில் இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறக்கும் நேரத்தை நீட்டித்து புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது. 

News image

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

Updated On :23 அக்டோபர் 2020, 1:41 pm

DIN

புதுச்சேரியில் இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறக்கும் நேரத்தை நீட்டித்து புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக புதுவை அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 

புதுச்சேரியில் உள்ள கடைகள், தனியார் அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் மதுபான கடைகள் இரவு 10 மணி வரை திறந்து வைக்க தளர்வு அளிக்கப்படுகிறது. அந்த தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளனர்.

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், புதுச்சேரியில் கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. 

இந்நிலையில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.