ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

புல்வாமா தாக்குதலில் பாக். அரசுக்கு நேரடி தொடர்பு : பாக். அமைச்சர் ஒப்புதல்

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் செளத்ரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

News image

பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் செளத்ரி

Updated On :29 அக்டோபர் 2020, 12:47 pm

DIN

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் செளத்ரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

கடந்த  2019ஆம் ஆண்டு இந்தியாவின் புல்வாமா பகுதியில் பயங்கிரவாத தாக்குதல் நடந்தது. இதில் இந்திய ரானுவத்தை சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பியது.

இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில் பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் செளத்ரி பேசியபோது, புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், புல்வாமா தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதில், பாகிஸ்தான் அரசிற்கு பங்கு இருப்பதாக அவர் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

பாகிஸ்தான் அமைச்சரின் இந்த கருத்து இருநாட்டு அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.