ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

உடல் உறுப்பு தானத்தில் ஸ்பெயின் முன்னிலை

உலகளவில் உடல் உறுப்பு தானத்தில் ஸ்பெயின் கடந்த 28 ஆண்டுகளாக முன்னிலை வகிப்பதாக ஸ்பெயின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

News image

உடல் உறுப்பு தானத்தில் ஸ்பெயின் முன்னிலை

Updated On :7 செப்டம்பர் 2020, 1:48 pm

உலகளவில் உடல் உறுப்பு தானத்தில் ஸ்பெயின் கடந்த 28 ஆண்டுகளாக முன்னிலை வகிப்பதாக ஸ்பெயின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

உலக அளவில் 10 லட்சத்தில் 49.6 பேர் உடல் உறுப்பு தானம் செய்கிறார்கள். ஆனால் ஸ்பெயின் நாட்டில் 10 லட்சத்தில் 117.4 பேர் தானம் செய்கிறார்கள்.

ஐரோப்பிய நாடுகளின் மொத்த உடல் உறுப்பு தானத்தில் ஸ்பெயின் நாட்டின் பங்கு 20 சதவீதம் ஆகும். உலகின் மொத்த தானத்தில் ஸ்பெயின் நாட்டின் பங்கு 6 சதவீதமாக உள்ளது. 

அதே நேரத்தில், ஸ்பெயின் அமெரிக்காவை விட இறந்த நோயாளிகளிடமிருந்து அதிகமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது.

உலகளவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 6 சதவீதம் அதிகரித்து 1,46,840 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.