திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

போடியில் இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து: அரசு மருத்துவமனை ஊழியர் பலி

போடியில் இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் அரசு மருத்துமனை ஊழியர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

News image
போடி விபத்தில் உயிரிழந்த நாகராஜ்
Updated On :7 செப்டம்பர் 2020, 3:17 pm

DIN

போடி: போடியில் இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் அரசு மருத்துமனை ஊழியர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

பெரியகுளத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 38). இவர் போடி அரசு மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். திங்கள் கிழமை இரவு பணி முடித்து பெரியகுளத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். போடி தேனி நெடுஞ்சாலையில் சாலைக் காளியம்மன் கோவில் அருகே சென்றபோது எதிரில் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த போடியை சேர்ந்த சரவணக்குமார் (43) பலத்த காயமடைந்தார். அவர் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போடி நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.