கரோனாவில் இறந்தவர்களில் 70% பேர் 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்
இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பேர் 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என செவ்வாய்க்கிழமை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஸ் பூஷன்

மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஸ் பூஷன்
இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பேர் 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஸ் பூஷன் கூறுகையில், இந்தியாவில் இதுவரை கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பேர் 5 மாநிலங்களைச் சார்ந்தவர்கள்.
அதில், மகாராஷ்டிரம் 37.14 சதவீதம், தமிழ்நாடு 10.89 சதவீதம், கர்நாடகம் 8.98 சதவீதம், ஆந்திர பிரதேசம் 6.17 சதவீதம் மற்றும் உத்தர பிரதேசம் 5.46 சதவீதம் ஆகும்.
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 1,133 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதில், 423 பேர் மகாரஷ்டிர மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.
மேலும், தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 62 சதவீதம் பேர் 5 மாநிலங்களைச் சார்ந்தவர்கள்.
அதில், மகாராஷ்டிரம் 27 சதவீதம், ஆந்திர பிரதேசம் 11 சதவீதம், கர்நாடகம் 10.98 சதவீதம், உத்தர பிரதேசம் 7 சதவீதம் மற்றும் தமிழ்நாடு 6 சதவீதம் ஆகும்.
மேலும் 14 மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவானோர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனஎ என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...