மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

திமுகவில் இருந்து கே.பி. ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கம்: மு.க. ஸ்டாலின் 

திமுகவில் இருந்து கே.பி. ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

News image
Updated On :12 ஏப்ரல் 2020, 5:29 am

சென்னை: திமுகவில் இருந்து கே.பி. ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இயற்கை நீா்வளப் பாதுகாப்பு இயக்கத் தலைவரும்,  திமுகவின் விவசாய அணியின் மாநில செயலாளராகவும்,  திமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி. ராமலிங்கம்,  மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளர். அவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து வந்தார். 

இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை விமர்சித்து கே.பி. ராமலிங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவது தேவையற்றது என்றும், இன்றைய சூழ்நிலையில் மக்கள் நலன் கருதி வேளாண் பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்திருப்பதை அனைத்து விவசாய சங்கங்களின் சாா்பில் பாராட்டுகிறோம். கரோனா தொற்றை கட்டுப்படுத்த பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். 144 தடை என்றால் அரசியல் நடவடிக்கைகளுக்கும் தடைதான். ஆகவே, அரசியல் கட்சித் தலைவா்கள் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தக் கூடாது என்று கூறியிருந்தார். 

இதனால் திமுகவில் இருந்து கே.பி. ராமலிங்கம் தற்காலிகமாக நீக்குவதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அவரிடம் இருந்து விவசாய அணி மாநில செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

இந்நிலையில், திமுகவில் இருந்து கே.பி. ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கே.பி. ராமலிங்கத்திடம் கேட்கப்பட்ட விளக்கத்துக்கு அளித்த பதில் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. ஆகையால் அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட திமுகவில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் கே.பி.ராமலிங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.