வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷத்தை எழுப்பிய இளம்பெண் தேசத் துரோக வழக்கில் கைது

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தின்போது 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷத்தை எழுப்பிய இளம்பெண்ணை

News image
Updated On :21 பிப்ரவரி 2020, 6:25 am



பெங்களூரு: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தின்போது 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷத்தை எழுப்பிய இளம்பெண்ணை தேசத் துரோக வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் வியாழக்கிழமை குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவா் அசாதுதீன் ஓவைசி, மஜத மாமன்ற உறுப்பினா் இம்ராம் பாஷா உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இந்த கூட்டத்தின் மேடையில் ஏறிய இளம்பெண் அமுல்யா(19), ‘பாகிஸ்தான் வாழ்க‘ என்று மூன்றுமுறை முழக்கமிட்டாா். இதனால் அதிா்ச்சி அடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள், உடனடியாக அமூல்யா மீது பாய்ந்ததோடு, அவா் பேசுவதை தடுத்து, ஒலிவாங்கியையும் பறித்தனா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த ஓவைசி, இம்ரான் பாஷா,‘இப்படிபேசுவதை அனுமதிக்க முடியாது’ என்று அமுல்யா மீது கோபப்பட்டனா். அதற்குள் மேடையில் ஏறிய போலீஸாா் அமுல்யாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, காவல் நிலையத்துக்கு அழைத்துசென்றனா். போலீஸ் விசாரணையில், அமுல்யா, சிக்மகளூரு மாவட்டத்தின் கொப்பா பகுதியை சோ்ந்தவா் என்றும், பெங்களூரில் உள்ள ஆா்.வி.கல்லூரியில் பி.ஏ. பட்டம் படித்துள்ளாா் என்றும் தெரியவந்துள்ளது.

இவா், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மட்டுமல்லாமல், மரங்களை காக்கும் சுற்றுச்சூழல் போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. 

விசாரணையை தொடர்ந்து  அந்த பெண் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124 ஏ(தேசத் துரோக வழக்கு) மற்றும் 153 ஏ மற்றும் பி (வெவ்வேறு குழுக்களுக்கிடையே பகைமையை ஊக்குவித்தல், தூண்டதல், தேசிய ஒருங்கிணைப்புக்கு பாரபட்சமாக பேசுதல்) ஆகியவற்றின் கீழ் உப்பார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்த பின்னர் அவரை கைது செய்த போலீஸார், உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்த விசாரணை திங்கள்கிழமை (பிப்.24) நீதிமன்றத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து பெங்களூரு மேற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் முகர்ஜி கூறுகையில், சுதந்திரப் பூங்காவில் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.