மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு இன்று தேர்தல்: மாலை முடிவுகள் அறிவுப்பு

மாநிலங்களவையில் காலியாக உள்ள 19 உறுப்பினர்களுக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் மாலை 5 மணியளவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு இன்று தேர்தல்: மாலை முடிவுகள் அறிவுப்பு

மாநிலங்களவையில் காலியாக உள்ள 19 உறுப்பினர்களுக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் மாலை 5 மணியளவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாடு முழுவதும் 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மார்ச் மாதம் தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் 36 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 19 உறுப்பினர் பதவிகளுக்கு  மார்ச் மாதம் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் கரோனா தொற்று பாதிப்பால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து 19 உறுப்பினர் பதவிகளுக்கான இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும், முடிவுகள் மாலை 5 மணிக்கு அறிவிக்‍கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், ஆந்திரம், குஜராத் மாநிலத்தில் இருந்து தலா 4 இடங்களும், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் இருந்து தலா 3 இடங்களும், ஜார்க்கண்டிலிருந்து 2 இடங்களும், மிசோரம், மேகாலயா மற்றும் மணிப்பூரிலிருந்து தலா 1 இடங்கள் என மொத்தம் 19 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்தந்த மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்து வந்தும் தங்கள் வாக்கை பதிவு செய்து வருகின்றனர். 

இந்த தேர்தல் முடிவுகளை மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com