ஈரோடு டாஸ்மாக் கடைகளில் பாதியாக குறைந்த விற்பனை 

பணப் புழக்கம் இல்லாததால் ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை பாதியாக குறைந்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பணப் புழக்கம் இல்லாததால் ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை பாதியாக குறைந்தது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், ஊரடங்கில் படிப்படியாக தளர்வு வழங்கப்பட்டுள்ளதால், பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய தொழில்சாலைகள் வரை மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன. அதேபோல், அரசு டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தற்போது மாவட்டம் முழுவதும் 207 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது கரோனா காரணமாக பணப்புழக்கம் இல்லாததால் மதுபிரியர்களின் வருவாய் கேள்விக்குறியானதால், மதுவாங்க பணம் இல்லாமல் டாஸ்மாக் கடைக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். 

இதன்காரணமாக மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுவிற்பனை 40 முதல் 50 சதவீதம் குறைந்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கரோனா ஊரடங்கு பாதிப்பில் இருந்து இன்னும் ஈரோடு முழுமையாக வெளிவரவில்லை. பல தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைய துவங்கியுள்ளது. இதனால், விற்பனையும் பாதியாக குறைந்துள்ளது. உதாரணமாக கிராமப்புறத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையில் தினந்தோறும் ரூ.1லட்சத்திற்கு தோராயமாக விற்பனையாகிறது என்றால் தற்போது ரூ.60ஆயிரத்திற்கு கீழ் விற்பனையாகிறது. 

இதேபோல் நகரப்பகுதியில் ரூ.3லட்சம் முதல் ரூ.4லட்சம் விற்பனையாகும் கடைகளிலும் பாதியாக குறைந்து விட்டது. டாஸ்மாக் மாவட்ட பொதுமேலாளர் மணிமொழி கூறுகையில், மாவட்டத்தில் தற்போது 207 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. கரோனா ஊரடங்குகிற்கு முன்பிருந்த மதுவிற்பனையை விட தற்போது குறைந்துள்ளது. அது ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் வேறுபட்டு உள்ளது. அதன் புள்ளிவிவரம் தற்போது தெரிவிக்க இயலாது. மாவட்டத்தில் பிற வணிக நிறுவனங்கள் விற்பனை நேரத்தை குறைத்தது போல, டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை குறைப்பது எங்களது கையில் இல்லை. டாஸ்மாக் தலைமை இயக்குநர் தான் முடிவெடுப்பார், என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com