கர்நாடகத்தில் 16 நாள்களில் 2.03 லட்சம் கரோனா பரிசோதனை

கர்நாடகத்தில் 57 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) ஆய்வகங்களில் 2.03 லட்சம் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது,


பெங்களூரு: கர்நாடகத்தில் 57 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) ஆய்வகங்களில் 2.03 லட்சம் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது, மாநிலத்தில் 16 நாள்களில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாகி உள்ளோம் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் தெரிவித்தார். 

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வரும் நிலையில், கர்நாடகத்தில் 57 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வகங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 2.03 லட்சம் கரோனா பரிசோதனைகளை நடத்தப்பட்டுள்ளது. 

மே 8 ஆம் தேதி 1 லட்சம் பரிசோதனைகளை மேற்கொண்ட நிலையில், மாநிலத்தில் 16 நாட்களில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி உள்ளோம். இந்த சாதனைக்காக, மருத்துவர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

மாநிலத்தில் 1,743 பேர் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அவர்களில் 597 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், இந்நோய்க்கு 41 பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com