சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.2.52 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல்நாட்டும் விழாவும், 558 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மதிவண்டிகள் வழங்கும் விழாவும் திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா, தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவரும் அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாஜலம் ஆகியோர் சங்ககிரி பேரூராட்சிக்குசிக்குள்பட்ட பகுதிகளில் 14வது நிதிக்குழு மானியம் 2வது நிலை திட்டத்தின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் 3வது வார்டு எஸ்.கே.நகர் பிரதான சாலை மற்றும் குறுக்குசாலைகள் அமைக்கவும், தமிழ்நாடு நகர்புற சாலைகள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் 12வது வார்டு பயணியர் மாளிகை முதல் பிஎஸ்ஜி கல்லூரி வழியாக திருச்செங்கோடு பிரதான சாலை வரையிலும், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் 18வது வார்டு ஆணைக்கல்பாளையத்தில் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை செய்தும் அடிக்கல் நாட்டியும் தொடக்கி வைத்தனர்.
மேலும் சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 129 மாணவர்களுக்கும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 168 மாணவிகளுக்கும், மாதிரிபள்ளி 57 மாணவ, மாணவிகளுக்கும், நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 40 மாணவ, மாணவிகளுக்கும், செட்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி 58 மாணவ, மாணவிகளுக்கும், தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 106 மாணவ, மாணவிகளுக்கும் மொத்தம் 558 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினர்.
பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியம், சங்ககிரி மாவட்டக்கல்வி அலுவலர் என்.இராமசாமி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை கே.கவிதா, சங்ககிரிஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜன், உதவி தலைமையாசிரியர் சக்திவேல், தேவூர் தலைமையாசிரியர் ஏ.அய்யாசாமி, அதிமுக கிழக்கு ஒன்றியதுணைச் செயலர் மருதாஜலம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுதுணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன், அதிமுக மேற்கு ஒன்றியச் செயலர் சுந்தரராஜன், அரசு வழக்குரைஞர் ஆர்.சுப்ரமணி, அதிமுக முன்னாள்தொகுதி கழகச் செயலர் வி.ஆர்.ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி சங்ககிரி ஒன்றியச் செயலர் கே.பிரசாந்த் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு!
வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம்
கேன்ஸ்-ல் திரையிடப்படும் மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய படம!

கேரள முதல்வர் பினராயி விஜயன் தொகுதியில் வெடிபொருள்கள் பறிமுதல்!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


