சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள திருநங்கைகள் அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் வைக்கும் விழா சங்ககிரி பவானி பிரதான சாலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கட்டட வளாகம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரியில் உள்ள அனைத்து திருநங்கைகளும் ஒன்றிணைந்து சங்ககிரி காவல்நிலையம் எதிரே உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கட்டிட வளாகம் முன்பு வண்ண கோலங்கள் வரைந்து ஐந்து பானைகளில் சர்க்கரை பொங்கல் வைத்தும், கரும்பு, மஞ்சள் கிழங்குகளை வைத்தும் உழவர்களுக்கும், இறைவனுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலல் வாழை இலையில் சர்க்கரை பொங்கல், தேங்காய், வாழைப்பழம், பல்வேறு பழவகைகளை வைத்து சுவாமிகளை வழிப்பட்டனர்.
இந்த நிகழ்வில், மாவட்ட ரோட்டரி சங்க கல்விக்குழுத்தலைவர் எ.வெங்கடேஸ்வரகுப்தா, சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் செயலர் ஹேலினாகிறிஸ்டோபர், ரேட்டரி சங்க முன்னாள் தலைவர் சிகேஆர்.ராமசாமி, மளிகை வியாபாரி சங்க நிர்வாகி ஜெயக்குமார் ஆகியோர் திருநங்கைகள் பொங்கல் வைப்பதற்கான தேவையான பொருள்களையும், 10 நபர்களுக்கு புத்தாடைகளையும் வழங்கினர்.
மேலும், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கௌதம்வெங்கடாஜலம், இன்னர்வீல் சங்க தலைவி இந்திராணி, முன்னாள் தலைவர்கள் வசந்தி, ரேவதி, கீதா, ஏகேடி.செல்வி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
பொது இடத்தில் திருநங்கைகள் பொங்கல் வைத்து இறைவனுக்கு நன்றி செலுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்மோனியா கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை!

டிசம்பருக்குள் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும்: பியூஷ் கோயல்

டி20 உலகக் கோப்பை: மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஹாட்ரிக் வெற்றி!

இன்றைய செய்திகள் ஜூன் 21 - நேரலை!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




