

கேரள அரசியல் வரலாற்றில் இந்த சட்டப்பேரவைத் தேர்தல் புதிய மாற்றத்தை உருவாக்கும் என வாக்களித்த பின் மத்திய அமைச்சர் வி. முரளீதரன் தெரிவித்தார்.
கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், மத்திய அமைச்சர் முரளீதரன் கேரளத்தில் உள்ள கொட்டாரம் வாக்குச்சாவடியில், தனது வாக்கை பதிவு செய்தார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
இந்த தேர்தல் கேரள அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கப்போகிறது. மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள். இடது மற்றும் வலது ஜனநாயக முன்னணி கூட்டணிகளை நிராகரிப்பார்கள் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.