வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: தமிழக ஆளுநர் அறிவுறுத்தல்

தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுறுத்தியுள்ளார்.

News image
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
Updated On :8 ஏப்ரல் 2021, 11:57 am

DIN

தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் நாள்தோறும் 4 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து நோய்ப் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கரோனா பரவலுக்கு எதிராக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கரோனா இரண்டாம் அலை காரணமாக முதியோர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தகுதியானவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.