வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தில்லி எய்ம்ஸில் 20 மருத்துவர்களுக்கு கரோனா

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 20 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

News image
தில்லி எய்ம்ஸில் 20 மருத்துவர்களுக்கு கரோனா
Updated On :9 ஏப்ரல் 2021, 12:20 pm

ANI

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 20 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

கரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் சூழலில், தொடர்ந்து மருத்துவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை சேர்ந்த 37 மருத்துவர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது எய்ம்ஸ் மருத்துவர்கள் 20 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து எய்ம்ஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,

கடந்த 10 நாள்களில் 20 மருத்துவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 6 இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, அதில் 3 பேர் மட்டுமே கரோனா தடுப்பூசி முதல் டோஸை செலுத்திக் கொண்டவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.